PressAbout Us

The vision and mission of this organization are to assist and support child health, education, and other social activities, including blood donation camps. Blood donation is one of the major initiatives of this organization.

We aim to contribute to various areas, including child protection, education, empowerment, family welfare, art and culture, digital and financial inclusion, as well as disaster relief and rehabilitation.

October 13, 2025

K. தேவி (11ஆம் வகுப்பு) என்ற மாணவி, மருத்துவ செலவிற்காக 2000 ரூபாய் காசோலை வழங்கப்பட்டது

குன்றத்தூர் பகுதியை சேர்ந்த K .தேவி என்ற மாணவி அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். தாய் இல்லை, தந்தை மட்டுமே, நெசவு தொழில். மாணவி அவர்கள் தோல் ஒவ்வாமை பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளார். குடும்ப வறுமை சூழ்நிலைக் காரணமாக மருத்துவ செலவிற்காக நம்மிடம் விண்ணப்பித்து இருந்தார். எனவே அவரின் உண்மை நிலை அறிந்து முதற்கட்டாக 2000 ரூபாய் காசோலை நம் சிறகுகள் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது. நிதி உதவி செய்து உதவிய நம் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நம் நிறுவனம் சார்பாக மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

October 12, 2025

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் Dr.A.P.J அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 12ம் ஆண்டு இரத்ததான முகாம் நடைபெற்றது

கடந்த அக்டோபர் 12 ஞாயிறு அன்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் Dr.A.P.J அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பாக மாபெரும் 12ம் ஆண்டு இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பான முறையில் செயல்பட்டு முகாமை நடத்தி கொடுத்த நமது ஒருங்கிணைப்பாளர் தோழர் பாபு, பொருளாளர் தோழர் ஜெயசூர்யா, செயற்குழு உறுப்பினர்கள் தோழர் ஜீவா, தோழர் சதிஷ் குமார், தோழர் வினோத்குமார் , சகோதரி விஜயலக்ஷ்மி, சகோதரி ஷாலினி மற்றும் அலுவலக உதவியாளர் திருமதி பியூலா ஆகிய அனைவருக்கும் குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

August 15, 2025

கடந்த கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

இன்று குன்றத்தூர் சேக்கிழார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 79-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு நமது சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பாக கடந்த கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், பாடப்பிரிவுகள் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கும் , ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

July 13, 2025

சிறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம்

ஜூலை 13 ஞாயிறு அன்று காலை நமது உறுப்பினர் திரு.சத்தியநாராயணன் மற்றும் செயற்குழு உறுப்பினர் சகோதரி T.ஷாலினி அவர்களின் தலைமையில் நம் சிறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது, இவர்களுக்கு உதவியாக சிறப்பாக செயல்பட்ட செயற்குழு உறுப்பினர் திரு.ஜீவா அவர்களுக்கும் நமது சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம், முதன்முறையாக முழு நாள் முகாமிற்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பான முறையில் செயல்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும், முக்கிய பொறுப்பாளர்களுக்கும் நம் தொண்டு நிறுவனம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

May 1, 2025

12ம் ஆண்டு இரத்ததான முகாம்

சிறப்பான முறையில் நமது செயற்குழு உறுப்பினர்கள் தோழர். ஜீவா மற்றும் தோழர். வினோத் அவர்களின் தலைமையில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் Dr.A.P.J அப்துல் கலாம் அவர்களின் நினைவை போற்றும் வகையில் நம் சிறகுகள் தொண்டு நிறுவனம் நடத்திய மாபெரும் 12ம் ஆண்டு இரத்ததான முகாம் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த முகாம் நடைபெற ஒத்துழைப்பு அளித்த நமது குழு பொறுப்பாளர்கள், செயற்குழுவினர் மற்றும் நம் உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

March 20, 2025

கடந்த பிப்ரவரி 2025 மாதத்தில் மட்டும் நம் சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் மூலம் 14 யூனிட் 🩸குருதி🩸 தானம் வழங்கப்பட்டுள்ளது

கடந்த பிப்ரவரி 2025 மாதத்தில் மட்டும் நம் சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் மூலம் 14 யூனிட் 🩸குருதி🩸 தானம் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மொத்தமாக 🩸 1688 யூனிட் 🩸 நம் சிறகுகள் குழு சார்பாக குருதி தானமாக வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்காக பங்காற்றிய நம் தோழமைகளுக்கு நம் நிறுவனம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

March 16, 2025

குன்றத்தூர் பேருந்து நிலையம் போலீஸ் பூத் அருகில் (Police Booth) தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது

கோடை காலத்தை முன்னிட்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நமது சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகில் சிறப்பான முறையில் நடைபெற்றது. நிகழ்விற்கு உறுதுணையாய் நின்று சிறப்பான முறையில் நடைபெற காரணமாய் இருந்த நம் பொறுப்பாளர்கள்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நம் குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனிவரும் நாட்களிலும் நாம் ஒன்றிணைந்து மேலும் பல மக்கள் நலன் சார்ந்த பணிகளில் சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🏼

December 6, 2024

நமது சிறகுகள் தொண்டு நிறுவனம் 11-வது ஆண்டு நிறைவுபெற்று 12-ஆம் (06/12/2024) ஆண்டு அடி எடுத்து வைக்கிறது

நமது சிறகுகள் தொண்டு நிறுவனம் 11-வது ஆண்டு நிறைவுபெற்று 12-ஆம் (06/12/2024) ஆண்டு அடி எடுத்து வைக்கிறது என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த 11 ஆண்டுகளில் கல்வி, மருத்துவ உதவி, மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், புற்றுநோய் விழிப்புணர்வு, வெள்ள நிவாரணம், டெல்டா பேரிடர் நிவாரணம், கோவிட்-19 நிவாரணப் பணிகள், குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி போன்ற பல சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்பதை நம் சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் சார்பாக நாம் அனைவரும் இதற்காக நன்றியுடனும் பெருமையுடனும் உணர்வோம், உங்கள் அன்பான மற்றும் சரியான நேரத்தில் ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நம் சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், எதிர்காலத்திலும் உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். நாம் இன்னும் பல படி சென்று இன்னும் பெரிய சமூக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இதுவே நமது இலக்காகவும் உறுதிமொழியாகவும் இருக்க வேண்டும் என்று இந்நாளில் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

November 26, 2024

மாணவி V.தாரணி (B.Com) அவருக்கு கல்லூரி கட்டணம் ரூபாய் 15,000/- காசோலை வழங்கப்பட்டது

குன்றத்தூர் பகுதியை சேர்ந்த V.தாரணி என்ற மாணவி குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரியில் B.Com முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அவரின் குடும்ப சூழநிலைக் காரணமாக கல்லூரி கட்டணம் வேண்டி நம்மிடம் விண்ணப்பித்து இருந்தார். எனவே அவரின் குடும்ப சூழ்நிலையை அறிந்து 15000ரூபாய் காசோலை நம் சிறகுகள் தொண்டு நிறுவனம் மூலம் நேற்று வழங்கப்பட்டது. நிதி உதவி செய்து உதவிய நம் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நம் நிறுவனம் சார்பாக மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

November 24, 2024

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயில் திருக்குளம் முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக தூய்மை செய்யப்பட்டது

நம் செயல் பொருளாளர் திரு.ஜெயசூர்யா தலைமையில் நமது சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பாக குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயில் திருக்குளம் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தூய்மை செய்யும் பணியை சிறப்பான முறையில் நாம் நடத்தி முடித்திருக்கிறோம். இதில் நம்முடன் இணைந்து பணியாற்றிய குன்றத்தூர் நகராட்சி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சிறப்பான முறையில் வழி நடத்திய திரு.ஜெயசூர்யா அவர்களுக்கும் சிறப்பு நன்றி செயற்குழு தலைவர் திரு. வெங்கடேசன் அவர்களுக்கும் நம் சிறகுகள் குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

October 27, 2024

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயில் திருக்குளம் தூய்மை செய்யும் பணி

நமது சிறகுகள் தொண்டு நிறுவனம் ,குன்றத்தூர் நகராட்சி மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயில் திருக்குளம் தூய்மை செய்யும் பணி நமது தொண்டு நிறுவனத்தின் செயல் பொருளாளர் திரு.ஜெயசூர்யா அவர்களின் தலைமையில் வரும் ஞாயிறு காலை 6.30 மணியளவில் நடைபெற இருக்கின்றது. எனவே நம் சிறகுகள் குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் , மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

October 20, 2024

இரத்ததான முகாம்

நமது சிறகுகள் தொண்டு நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் 🩸1600🩸 யூனிட் இரத்த தானத்தை தொடர்ந்து மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் இளைஞர்களின் கனவு நாயகன் டாக்டர் A.P.J. அப்துல்கலாம் ஐயா அவர்களின் 93- வது பிறந்தநாளை முன்னிட்டு 11-ஆம் ஆண்டு இரத்ததான முகாம் நமது தொண்டு நிறுவனத்தின் செயற்குழு தலைவர் திரு.வெங்கடேசன் அவர்களின் தலைமையில் குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அவருக்கும், அவருடன் ஒருங்கிணைந்து செயல்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் நமது சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

September 1, 2024

சிறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் அன்னை மருத்துவக்கல்லூரி, ராஜலட்சுமி மருத்துவமனை, இவர்களுடன் இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்

நமது சிறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் அன்னை மருத்துவக்கல்லூரி, ராஜலட்சுமி மருத்துவமனை, இவர்களுடன் இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் நாளை ஞாயிறு காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் அனைத்து உறுப்பினர்களும், பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொண்டு இந்த முகாமை சிறப்பிக்குமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

August 15, 2024

கடந்த கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

இன்று குன்றத்தூர் சேக்கிழார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 78-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு நமது சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பாக கடந்த கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், பாடப்பிரிவுகள் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கும் , ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

July 25, 2024

குன்றத்தூர் மின்சார அலுவலகம் (EB Office) எதிரில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் வேலி அமைக்கப்பட்டது

குன்றத்தூர் மின்சார அலுவலகம் எதிரில் (EB office) பெருமாள் கோவில் அருகில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் குன்றத்தூர் நகராட்சி மற்றும் நமது சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் சார்பாக இன்று தூய்மை பணியாளர்களின் மூலம் அந்த இடத்தை சுத்தப்படுத்தி வேலி அமைக்கப்பட்டது மற்றும் வரும் காலங்களில் அங்கு குப்பை கொட்டாதவாறு நமது சிறகுகள் தொண்டு நிறுவனம் மூலம் எம்மதமும் சம்மதம் என்ற மூன்று மத கடவுள்களின் புகைப்படம் பொருந்திய போஸ்டர் அந்த வேலியில் பொருத்தப்பட்டது.

June 23, 2024

குன்றத்தூர் பாலவராயன் குளம் தூய்மை செய்யும் பணி

நமது சிறகுகள் தொண்டு நிறுவனம், குன்றத்தூர் நகராட்சி, ரூட் லேம்ப் டிரஸ்ட், ஆவடி, ( Exnora ) எக்சுனோரா அமைப்பு மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து இன்று குன்றத்தூர் பாலவராயன் குளம் தூய்மை செய்யும் பணி மிக சிறப்பான முறையில் தொடங்கப்பட்டது, இதில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்களது சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

May 12, 2024

இரத்ததான முகாம்

May 6, 2024

குழந்தை புற்றுநோய் விழிப்புணர்வுக்காக 2-ஆம் ஆண்டு LAVENDER JOURNEY 🎗️ 2024 மிதிவண்டிப் பேரணி (Cycle Rally)

நமது சிறகுகள் தொண்டு நிறுவனம் நடத்தும் குழந்தை புற்றுநோய் விழிப்புணர்வுக்காக 2- ஆம் ஆண்டு LAVENDER JOURNEY 🎗️ 2024 மிதிவண்டிப் பேரணி (cycle rally) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது வருகின்ற மே மாதம் 05-ஆம் தேதி நடத்தப்படுகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இதில் அனைத்து உறுப்பினர்களும் உடனிருந்து இந்த பேரணியை நடத்தித் தருமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

April 11, 2024

குன்றத்தூர் நாகேஸ்வரர் கோயில் அருகில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில்..

குன்றத்தூர் நாகேஸ்வரர் கோயில் அருகில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் குன்றத்தூர் நகராட்சி நமது தொண்டு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று இன்று தூய்மை பணியாளர்களின் மூலம் அந்த இடத்தை சுத்தப்படுத்தி கோலம் போடப்பட்டது மற்றும் வரும் காலங்களில் அங்கு குப்பை கொட்டாதவாறு நமது தொண்டு நிறுவனம் மூலம் எம்மதமும் சம்மதம் என்ற மூன்று மத கடவுள்களின் புகைப்படம் பொருந்திய போஸ்டர் அந்த சுவற்றில் பொருத்தப்பட்டது.

April 10, 2024

ராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரியை சேர்ந்த விஸ்வநாதன் என்ற மாணவருக்கு 10000 ரூபாய்க்கான காசோலை கொடுக்கப்பட்டது

ராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரியை சேர்ந்த விஸ்வநாதன் என்ற மாணவர் & குழு, குளம், ஏரி மற்றும் நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை மனிதர்களை தவிர்த்து இயந்திரம் மூலம் சேகரித்து சுத்தம் செய்யும் தானியங்கி இயந்திரத்தை உருவாக்கி உள்ளனர். இந்த குழு நம் சிறகுகள் தொண்டு நிறுவனத்திடம் அவர்களின் திட்டத்தினை விரிவுப்படுத்த நிதியுதவி வேண்டி விண்ணப்பித்து இருந்தனர். கடந்த வாரம் நம் அலுவலகத்தில் இந்த திட்டத்தினை பற்றி அவர்கள் விவரித்து இருந்தனர். இந்த திட்டத்தின் விளைவு எதிர் காலத்தில் கழிவுகளை சுத்தம் செய்ய மனிதனின்றி இயந்திரம் மட்டுமே போதும். எனவே நம் நிறுவனம் அத்திட்டத்தினை பாராட்டி, மனித நலனை கருத்தில் கொண்டு இக்குழுவுடன் இணைந்து இந்த திட்டத்தினை மேம்படுத்த நிதியுதவி செய்ய முன்வந்துள்ளது. நேற்று அவர்களை சந்தித்து 10000 ரூபாய்க்கான காசோலை கொடுக்கப்பட்டது. இது போன்ற சமூக அக்கறைக் கொண்ட அனைத்து செயல்களிலும் நம் சிறகுகள் தொண்டு நிறுவனம் நிற்கும்.

December 20, 2023

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் வரலாறு காணாத மழையின் காரணமாக மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் வரலாறு காணாத மழையின் காரணமாக மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த மக்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது சிறகுகள் தொண்டு நிறுவனம் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் அந்த மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப கடவுளை வேண்டிக் கொள்வோம்.

December 18, 2023

தந்தையை இழந்து தவிக்கும் இரண்டு குழந்தைகள் யுவன்ராஜ் (வயது 13) மற்றும் இவாஞ்சலின் மேரி (வயது 11) கல்வி உதவிக்காக நமது சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவி வழங்கப்பட்டது

தந்தையை இழந்து தவிக்கும் இரண்டு குழந்தைகள் யுவன்ராஜ் வயது 13 மற்றும் இவாஞ்சலின் மேரி வயது 11 இந்த இரண்டு குழந்தைகளின் கல்வி உதவிக்காக நமது சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவி கேட்டிருந்தனர், அவர்களின் குடும்ப சூழ்நிலையை அறிந்து இந்த ஆண்டு குழந்தைகளின் கல்வி நிதி ரூபாய் 21000 திரு.ராக்கி குடும்பத்தினர் அக்குழந்தைகளின் தாயாரை வரவழைத்து காசோலை வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்🙏🏼💪🏻🥳 திரு.ராக்கி குடும்பத்தினருக்கு நமது சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் அந்த குடும்பம் இன்னும் பல நற்செயல்களில் ஈடுபட நமது நிறுவனத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

December 6, 2023

நமது சிறகுகள் தொண்டு நிறுவனம் 10-வது ஆண்டு நிறைவுபெற்று 11-ஆம் (06/12/2023) ஆண்டு அடி எடுத்து வைக்கிறது

நமது சிறகுகள் தொண்டு நிறுவனம் 10-வது ஆண்டு நிறைவுபெற்று 11-ஆம் (06/12/2023) ஆண்டு அடி எடுத்து வைக்கிறது என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த 9 ஆண்டுகளில் கல்வி, மருத்துவ உதவி, மருத்துவ முகாம், இரத்த தான முகாம்கள், புற்றுநோய் விழிப்புணர்வு, வெள்ள நிவாரணம், டெல்டா பேரிடர் நிவாரணம், கோவிட்-19 நிவாரணப் பணிகள் போன்ற பல சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்பதை நம் சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் சார்பாக நாம் அனைவரும் இதற்காக நன்றியுடனும் பெருமையுடனும் உணர்வோம், உங்கள் அன்பான மற்றும் சரியான நேரத்தில் ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நம் சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்🤝👍🏼 மேலும், எதிர்காலத்திலும் உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். நாம் இன்னும் பல படி சென்று இன்னும் பெரிய சமூக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இதுவே நமது இலக்காகவும் உறுதிமொழியாகவும் இருக்க வேண்டும் என்று இந்நாளில் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

November 5, 2023

நம் சிறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் எக்ஸ்னோரா சர்வதேச நிறுவனம்( EXNORA International) இணைந்து நடத்தும் 1000 விதைப்பந்து மற்றும் மரக்கன்று நடும் விழா

நம் சிறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் எக்ஸ்னோரா சர்வதேச நிறுவனம்( EXNORA International) இணைந்து நடத்தும் 1000 விதைப்பந்து மற்றும் மரக்கன்று நடும் விழா வருகின்ற நவம்பர் மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் முருகன் கோவில் மலைப்பகுதியில் நடைபெற உள்ளது இவ்விழாவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மதிப்பிற்குரிய திருமதி.பவானி சுப்பராயன் அவர்களால் துவக்கி வைக்கப்படுகிறது. ஆகையால் இந்த விழாவில் அனைத்து உறுப்பினர்களும், பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து தருமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

October 25, 2023

சுஹாசினி (K.K. College of Pharmacy-ல் Diploma in Pharmacy 2ம் ஆண்டு) சகோதரியின் கல்லூரி கட்டணம் 10,000 ரூபாய்காண காசோலை கொடுக்கப்பட்டது

சென்னை, மாங்காடு பகுதியை சேர்ந்த திரு.சுரேஷ் ரவி & சுசிலா இவர்களின் மகள் சுஹாசினி, K.K. College of Pharmacy-ல் Diploma in Pharmacy 2ம் ஆண்டு படித்து வருகிறார். சகோதரியின் குடும்ப சூழ்நிலை காரணமாக தற்பொழுது அவர்களால் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத நிலையில், நம் சிறகுகள் தொண்டு நிறுவனத்திடம் உதவி நாடி உள்ளனர். பின்பு நேரில் சென்று அவர்களின் உண்மை நிலை விசாரிக்கப்பட்டு, சகோதரியின் கல்லூரி கட்டணம் நமது சிறகுகள் தொண்டு நிறுவனம் மூலம் 10,000 ரூபாய்காண காசோலை அந்த மாணவியின் பெற்றோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

October 16, 2023

திவாகர் (வயது 24) என்ற சகோதரர் இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்புக்கு 70000 ரூபாய்கான காசோலை அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

குன்றத்தூர் பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 24) என்ற சகோதரர் இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி உறுப்பு மாற்ற வேண்டிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் மருத்துவ சிகிச்சைக்காக நமது சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட 70000 ரூபாய்கான காசோலை நமது தொண்டு நிறுவனத்தின் செயற்குழு தலைவர் திருS.வெங்கடேசன் அவர்களின் முன்னிலையில் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், பொது மக்களுக்கும், உறுப்பினர்களுக்கும், மற்றும் பொருப்பாளர்களுக்கும் நம் சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மிக விரைவில் சகோதரர் திவாகர் உடல் நலம் பெற நாம் அனைவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுமாறு உங்களை அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

October 15, 2023

குன்றத்தூர் லயன்ஸ் சங்கம் மற்றும் சிறகுகள் தொண்டு நிறுவனம் இணைந்து இரத்ததான முகாம் நடத்தப்படும்

மறைந்த முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு குன்றத்தூர் லயன்ஸ் சங்கம் மற்றும் சிறகுகள் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தப்படும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற அக்டோபர் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து உறுப்பினர்களும் பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொண்டு இந்த இரத்ததான முகமை சிறப்பிக்குமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

October 12, 2023

மெட்ராஸ் தன்னார்வ இரத்த பணியகம் மற்றும் தன்னார்வ இரத்த தானம் செய்பவர்களின் சங்கம் (த.நா) இணைந்து நடத்தி நமது நிறுவனத்திற்கு விருது அளித்து கெளரவிக்கப்பட்டது

மெட்ராஸ் தன்னார்வ இரத்த பணியகம் மற்றும் தன்னார்வ இரத்த தானம் செய்பவர்களின் சங்கம் (த.நா) இணைந்து நடத்திய "45ம் ஆண்டு விருது விழாவில்". கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து தன்னார்வ இரத்ததானத்தில் நிலையான சேவையை வழங்கிய நம் சிறகுகள் தொண்டு நிறுவனத்திற்கு விருது அளித்து கெளரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது நம் ஒட்டுமொத்த உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி. நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த விருதை சமர்பிக்கிறோம். இந்த விழாவில் நிறுவன தலைவர் Dr. S.மணிமாறன், செயற்குழு உறுப்பினர் R.ஜீவா மற்றும் உறுப்பினர் K.சதீஷ் குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

October 8, 2023

சிறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் B.P ஜெயின் மருத்துவமனை,பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இவர்களுடன் இணைந்து நடத்திய இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம்

மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது சிறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் B.P ஜெயின் மருத்துவமனை,பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இவர்களுடன் இணைந்து நடத்திய இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முகாமில் உறுப்பினர்களும் பொறுப்பாளர்களும் மிக சிறப்பாக முறையில் கலந்து கொண்டு செயல்பட்டனர் அவர்களுக்கு நமது சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதே போல் இனி வரும் காலங்களில் நடக்கும் நிகழ்விற்கும் அனைத்து உறுப்பினர்களும் பொறுப்பாளர்களும் சிறப்பான முறையில் நடத்தி தருமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

May 1, 2022

Blood Donation Camp

Panchayat Union Primary School Opposite Kundrathur Bus Stand, Kundrathur

April 27, 2022

Provided ₹10,000 for B.Com General final year student A. Madhumitha's studies.

St. Thomas College of Arts & Science, Vadapalani, Chennai.

April 16, 2022

Conducted Free Cancer Screening & Counseling Camp in collaboration with the Cancer Institute (WIA), Adyar, Chennai.

Panchayat Union Primary School Opposite Kundrathur Bus Stand, Kundrathur

February 27, 2022

Miss Amutha (1st Year Physics, Vizhuppuram Government Arts College)

Miss Amutha's parents have passed away, and she is currently living with her grandparents. Due to her circumstances, she is unable to continue her studies. Our team visited her, confirmed her situation, and assured her that we will support her further edu

January 31, 2022

Provided ₹10,000 for B.Com first-year student Keerthana's studies.

St. Joseph College of Arts & Science, Kovur, Kundrathur, Chennai.

January 10, 2022

12A/80G certificate under the Income Tax Act of 1961

We have received the 12A/80G certificate under the Income Tax Act of 1961. Therefore, anyone willing to donate to our trust can do so. Siragugal Trust will provide a tax exemption receipt to our members and donors.

December 31, 2021

Donated 12 units of blood for various purposes.

Contribution from the Siragugal Team.

December 6, 2021

Celebrated 8 years of a successful journey and launched our YouTube channel.

Click here to visit our YouTube channel https://www.youtube.com/watch?v=b2ZdnBe_hFs

December 1, 2021

Donated 15 units of blood for various purposes.

Contribution from the Siragugal Team.

November 1, 2021

Donated 16 units of blood for various purposes between September and October.

Contribution from the Siragugal Team.

September 1, 2020

1st Year Rubber Ball Cricket Tournament (Dr. A.P.J. Trophy 2020)

Kundrathur

August 1, 2020

Conducted Free Siddha Ayurvedic Medical Counseling Camp

Panchayat Union Primary School, Opposite Kundrathur Bus Stand, Kundrathur

July 1, 2020

COVID-19: Provided grocery items for physically challenged individuals

Distributed to the people of Chennai.

June 1, 2020

COVID-19: Provided grocery items for physically challenged individuals

Distributed to the people of Adyar and Somangalam.

May 1, 2019

Blood Donation Camp

Near Periya Kovil, Kundrathur, Chennai - 600069

April 1, 2019

Miss. Iswarya

Contributed funds for her 11th and 12th standard education.

November 1, 2018

DELTA Distress Relief Fund

Assisted with necessary items, such as grocery supplies.

August 1, 2018

Blood Donation Camp

Near Periya Kovil, Kundrathur, Chennai - 600069

January 1, 2018

Blood Donation Camp

Near Periya Kovil, Kundrathur, Chennai - 600069

December 1, 2017

Distributed "Nilavembu Kudineer"

To create awareness and provide precautions against dengue fever, we distributed it to the people in the Kundrathur circle.

August 15, 2017

Blood Donation Camp

Near Periya Kovil, Kundrathur, Chennai - 600069

May 1, 2017

Miss Vaishali scored 1,111 marks out of 1,200.

We adopted Miss Vaishali for her +1 and +2 education expenses in July 2015. She achieved 1,111 marks out of 1,200 in her +2 exam. Congratulations, Vaishali!

October 25, 2016

Provided ₹25,000 for the surgery of a baby named Ahamed Hafsa.

Child Trust 12-A Nageswara Road, Nungambakkam, Chennai - 600034

October 15, 2016

Arranged the stage for Mr. A.P.J. Abdul Kalam's birthday celebration

Near Kundrathur Bus Stand, Kundrathur, Chennai - 600069

July 26, 2016

Arranged the 1st Year Tribute Stage for Mr. A.P.J. Abdul Kalam

Near Kundrathur Bus Stand, Kundrathur, Chennai - 600069

May 1, 2016

Blood Donation Camp

Near Periya Kovil, Kundrathur, Chennai - 600069

February 10, 2016

Provided ₹15,000 for the leg surgery of a baby named Dharshan.

MIOT Hospital, Chennai

January 1, 2016

Blood Donation Camp

Near Periya Kovil, Kundrathur, Chennai - 600069

December 1, 2015

Provided food and clothing for those affected by the floods in Chennai.

Kundrathur & Mudichur

October 15, 2015

Conducted a Drawing Competition - 2015 (A Tribute to Mr. A.P.J. Abdul Kalam)

Kundrathur Private Schools Kundrathur, Chennai - 600069

August 26, 2015

Provided sweets to 120 children on the occasion of Mother Teresa's 105th birthday.

Dazzling Stone Children’s Home Sirukalathur, Kunrathur, Chennai – 600069

August 15, 2015

Provided trophies and certificates for the top 3 rankers of the year 2015.

Kundrathur Boys & Girls Schools Kundrathur, Chennai - 600069

August 2, 2015

Blood Donation Camp

Near Periya Kovil, Kundrathur, Chennai - 600069

July 27, 2015

Lifetime Achievement Award presented to social worker Mr. Kuppusami Ayya.

Kundrathur, Chennai - 600069

July 1, 2015

Adopted Miss Vaishali for her +1 and +2 education expenses.

Kundrathur, Chennai - 600069

January 15, 2015

Provided ₹5,000 for Miss Vaishali's father's liver operation.

Kundrathur, Chennai - 600069

December 12, 2014

Provided ₹5,000 for the open-heart surgery of a baby named Ajay.

Kanchi Kamakotti Child Trust Hospital

August 26, 2014

Provided sweets to 350 children on the occasion of Mother Teresa's 104th birthday.

Valluvar Middle School Sivan Kovil Street, Thirunagasvaram, Kundrathur, Chennai - 600069

May 1, 2014

Provided 20 plates, 20 tumblers, and 1 first aid kit.

New Hope and New Life Trust No. 3/218, Kangaiamman Kovil Street, Purumbakkam, Medavakkam, Chennai - 600100

March 1, 2014

Provided donations for individuals suffering from leprosy.

Health First India No. W-504, 'C' Sector, 10th Street, Anna Nagar Western Extension, (Near SBOA School) Chennai – 600 101

February 22, 2014

Provided 7 mosquito bats.

Little Drops Public Charitable Trust No. 1 Kallurisalai, Koluthuvancherry, Paraniputtur, Chennai - 600122

January 25, 2014

Provided lunch for 120 children.

Dazzling Stone Children’s Home Sirukalathur, Kunrathur, Chennai – 600069

December 18, 2013

Assisted with ₹15,000.00 for open-heart surgery for Sakthivel, an 8-month-old baby.

Frontier Life Line Hospital No. 30C, Ambattur Industrial Estate Road, Mugappair, Chennai - 600101